தர்மபுரி மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல்
தர்மபுரி: தர்மபுரி இலக்கியம்பட்டி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில், நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி இலக்கியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபி?ஷக, ஆராதனைகள் நடந்தன. மாலை, 4.30 மணிக்கு, கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து, இலக்கியம்பட்டி மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று (ஆக.,10) மற்றும் கிடா வெட்டுதல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல், தர்மபுரி அமுதம் காலனி மாரியம்மன் கோவிலில், நேற்று மதியம், 2 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமுதம் காலனி, இந்திரா நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* தர்மபுரி குப்பா கவுண்டர் தெருவில் உள்ள பூவாடைக்காரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் குடம் எடுத்தல் மற்றும் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பால் குடம் மற்றும் கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.