உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்பிக்கலை அய்யன் கோவில் விழா: 1,500 கோழிகள், 300 கிடாக்கள் பலி

தம்பிக்கலை அய்யன் கோவில் விழா: 1,500 கோழிகள், 300 கிடாக்கள் பலி

ஈரோடு: ஈரோடு அருகே, கோவில் விழாவில், 1,500 கோழிகள், 300க்கும் மேற்பட்ட கிடாய்களை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு- சென்னிமலை சாலையில், முத்தம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில், நூற்றாண்டு பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று பொங்கல் வைபவம் நடந்தது. இதையொட்டி அதிகாலை முதலே, பக்தர்கள் வரத் தொடங்கினர். சுவாமிக்கு நேர்த்திக்கடனாக, 1,500க்கும் மேற்பட்ட கோழிகள், 300க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் வெட்டி பலி தந்தனர். விழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்தனர். கை கால் குடைச்சல், விஷக்கடி பிரச்சனை, பயந்த சுபாவம் கொண்ட குழந்தைகள், பக்தர்கள் கோவில் பூசாரியிடம் தாயத்து மற்றும் சிகப்பு கயிறு வாங்கி கட்டிக் கொண்டர். பெண்கள் பாம்பு புற்றுக்கு முட்டை, பால், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர். விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !