குடிகாடு மகாமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவம்
ADDED :3522 days ago
கள்ளக்குறிச்சி: குடிகாடு மகாமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி குடிகாடு கிராமத்தில் உள்ள மகாமாரியம்மனுக்கு ஆடி உற்சவம் நடந்தது. அதிகாலையில் பசுபூஜைக்குப் பின் மூலவர், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சக்தி அழைத்தல் வைபவத்திற்குபின் பெண்கள் 108 பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி ஏந்தி, ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். மகாமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தி, ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு சந்தன காப்பு அலங்கார பூஜை நடந்தது. வீதியுலா உற்சவமும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடிகாடு கிராம மக்கள் செய்திருந்தனர்.