பெரியாண்டவர் - பெரியாண்டிச்சி கோவிலில் ஆடித் திருவிழா
ADDED :3343 days ago
பவானி: பவானி, ஜம்பை கிராமம், சீதபாளையம் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள பெரியாண்டவர், பெரியாண்டிச்சி, பேச்சியம்மன், சடைச்சியம்மன், சீரங்காயம்மாள் கோவிலில் நேற்று காலை ஆடித்திருவிழா நடந்தது. காலை, 7 மணிக்கு சின்னமோளபாளையம் மடப்பள்ளியில் இருந்து புறப்பட்டு சீதபாளையம் கோவிலுக்கு சாமி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மதியம், 12 மணியளவில் கரகம் எடுத்து வரப்பட்டு, பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.