அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை
ADDED :3344 days ago
அவிநாசி: அவிநாசியில், முதலை விழுங்கிய சிறுவனை, தேவாரம் பாடி, மீண்டும் எழச்செய்தார் சுந்தரமூர்த்தி நாயனார். இவருக்கு, மங்கலம் ரோடு, தாமரைக் குளத்தின் கரையில், கோவில் அமைந்துள்ளது. இதில், குரு பூஜை விழா, நேற்று நடைபெற்றது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன், 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடை பெற்றன. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிவனடியார்கள் பங்கேற்று, சிவபுராணம் பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.