உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடியில் ஆடி வெள்ளி விழா: டி.ஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

இருக்கன்குடியில் ஆடி வெள்ளி விழா: டி.ஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

சாத்துார், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிக் கடைசி வெள்ளி பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாரியம்மன் கோயிலில் தென் மண்டல டி.ஐ.ஜி.,ஆனந்த்குமார்சோமானி தலைமையில் திருவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது. எஸ்.பி.,ராஜராஜன் ஆர்.டி.ஓ., கிருஷ்ணம்மாள், தாசில்தார் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். விழாவிற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலி பஸ்ஸ்டாண்ட், குடிநீர் வசதி, மின்விளக்கு, மருத்துவ வசதி, தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கை, பாதுகாப்பிற்கு வரும் போலீசார் தங்குவதற்கான ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சுகாதார அலுவலர் செல்வராஜ், டி.எஸ்.பி., குமார், கோயில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, கோயில் பரம்பரை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராமர்பூஜாரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !