தங்க குதிரை வாகனத்தில் மதுரை மீனாட்சி அம்மன் உலா!
ADDED :3344 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக., 3ம் தேதி வாஸ்து சாந்தியுடன் ஆடி முளைக்கொட்டு உற்சவம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடக்கும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள விழாக்கள் நான்கு. அவை ஆடி முளைக்கொட்டு, ஐப்பசி கோலாட்டம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகும். ஆடி முளைக்கொட்டு உற்சவத்தை முன்னிட்டு, விழாவின் 8ம் நாளான நேற்று, தங்க குதிரை வாகனத்தில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.