யோக ஆஞ்சநேயர் கோவிலில் பரிவார தெய்வங்களுக்கு பூஜை
ADDED :3347 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருப்பத்தூர் அக்ஹாரத்தில் அமைந்துள்ள யோக ஆஞ்சநேயர், பெரியக்காண்டியம்மன், கருப்பண்ணசாமி ஆலயத்தில் ஏழாம் ஆண்டு சண்டியாக ஹோம பூஜை விழா நடந்தது. முன்னதாக, 10ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை நடந்தது. நேற்று காலை, 8 மணி முதல் 1 மணி வரை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 13 அத்தியாவசிய ஹோமங்கள் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. சண்டியாக பூஜைகளை, கரூர் முரளி சிவாச்சாரியார் செய்திருந்தார். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.