உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் வருவார் என கூறி மயானத்தில் தவமிருந்த நபர்!

சிவன் வருவார் என கூறி மயானத்தில் தவமிருந்த நபர்!

புதுக்கோட்டை: சிவன் நேரில் வருவார் எனக் கூறி, மயானத்தில் தவமிருந்த நபரை, போலீசார் விரட்டி விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 60. இவர், வடுகாடு கிராம மயானத்தில், ஐந்து அடி ஆழம், ஐந்து அடி அகலத்தில் குழி தோண்டி, ஆடி அமாவாசை முதல் சிவனை நினைத்து தவமிருப்பதாக கூறி அமர்ந்துள்ளார். தொடர்ந்து, 10 நாட்களாக தவமிருக்கும் இவர், மாலை நேரத்தில் தட்டைப்பயிறு மட்டும் உண்பதாகவும், இதை அவரது உறவினர்கள் கொண்டு வந்து கொடுப்பதாகவும் ஊர் மக்கள் கூறினர். அவர், 12ம் நாள், சிவன் காட்சியளிப்பார்; இல்லாவிட்டால், 42வது நாள் காட்சியளிப்பார்; அதுவரை தவமிருப்பேன் என, கூறியதாக தெரிகிறது. தகவலறிந்து, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நேரில் சென்று பார்வையிட்டார். பின், அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, முத்துகிருஷ்ணனை அங்கிருந்து போலீசார் விரட்டிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !