திவ்ய பிரபந்தம் ஏக தின பாராயணம்
ADDED :3524 days ago
சென்னை: சென்னை, மேற்கு மாம்பலம், அருளிச்செயல் கைங்கர்ய சபா சார்பில், எட்டாம் ஆண்டு, ஏக தின திவ்ய பிரபந்த பாராயணம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, மேற்கு மாம்பலம், திருவேங்கடம் தெருவில் உள்ள, ஸ்ரீநாத் கல்யாண மண்டபத்தில் எட்டாம் ஆண்டு, ஏக தின திவ்ய பிரபந்த பாராயணம் நிகழ்ச்சி வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், காலை, 5:30 மணிக்கு, பெருமாள் திருவாராதனம், மந்த்ர புஷ்பம், திவ்ய பிரபந்த பாராயண துவக்கமும், இரவு, 7:30 மணிக்கு, திவ்ய பிரபந்த வேத சாற்றுமறையும் நடைபெற உள்ளன.