உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை கருப்பணசாமி கோயில் உண்டியல் வருமானம் ரூ.4 லட்சம்

கோட்டை கருப்பணசாமி கோயில் உண்டியல் வருமானம் ரூ.4 லட்சம்

வத்தலக்குண்டு: விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ரூ. 4 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்தது. விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா கடந்த வாரம் நடந்தது. ஒரு நாள் இரவு மட்டும் இவ்விழாவில் 3000க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு, விடிவதற்குள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் இவ்விழாவில் பங்கேற்பதில்லை. உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. தக்கார் மாலதி, நிலக்கோட்டை ஆய்வர் வீரசேகரன், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் உடன் இருந்தனர். ரூ. 4,18,000 உண்டியல் வருமானம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !