உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர்

சீர்காழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர்

நாகை:  நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த மாதானம் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் தலவிருட்சமான புளிய மரம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மீண்டும் அது ஒன்று சேர்ந்து துளிர் விட்டபோது அதிலிருந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் தோன்றியதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் அம்பாளை சரனடைந்து, மனமுருக பிரார்த்தனை செய்தால் தடைகள் யாவும் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் தீமிதித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு தீமிதித் திருவிழா ஆடிக்கடை வெள்ளியான (ஆக.,12) மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 3ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டனர். தீமிதித் திருவிழாவான (ஆக.,12) வெள்ளிக்கிழமை காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய அம்பாளுக்கு நேர்த்திக்கடனாக வேப்பிளை மாலை அணிவித்து, அர்ச்சனைகள் செய்ததுடன், மாவிளக்கு போட்டு வழிபட்டனர். மாலை கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியின் அருகே ஸ்ரீமுத்துமாரியம்மன் எழுந்தருள, புதுமண்ணி ஆற்றங்கரையில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கரகம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து தீமிதித்து அம்பாளை வழிபட்டனர். தீமிதித் திருவிழாவை முன்னிட்டு சீர்காழி தாலுக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லுhரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சீர்காழி, சிதம்பரத்தில் இருந்து மாதானத்திற்கு அரசு சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி சிர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !