உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

புதுச்சேரி சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா (ஆக.,12) வெள்ளிக்கிழமை நடந்தது.

முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் தேவஸ்தானம் சந்துவெளி மாரியம்மன் கோவில் 76ம் ஆண்டு செடல் திருவிழா (ஆக.,12) வெள்ளிக்கிழமை நடந்தது. கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன்  விழா துவங்கியது. (ஆக.,12) வெள்ளிக்கிழமை செடல் விழாவை முன்னிட்டு  காலை 9:00 மணிக்கு கரகம் அலங்கரித்தல், பகல் 12:00 மணிக்கு கூழ் வார்தல் நிகழ்ச்சியும், மாலை 4:00 மணியளவில் செடல் விழாவும் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திரவுபதியம்மன் தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !