உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை மடிப்பாக்கத்தில் சுவாசினி பூஜை

சென்னை மடிப்பாக்கத்தில் சுவாசினி பூஜை

சென்னை: மடிப்பாக்கத்தில், ஆடி மாத நவாவர்ண சுவாசினி பூஜை, 14ம் தேதி நடக்கிறது. மடிப்பாக்கத்தில், 24 ஆண்டு களாக, ஆடி மாதத்தில், நவாவர்ண சுவாசினி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 25ம் ஆண்டாக இந்த விழா, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரத்தில் உள்ள சமூகநலக் கூடத்தில், 13ம் தேதி மாலை, குத்துவிளக்கு பூஜையுடன் துவங்குகிறது. 14ம் தேதி காலை, கணபதி ஹோமம், சவுபாக்கிய லட்சுமி ஹோமம் ஆகியவை நடக்கின்றன. பின், சுவாசினி பூஜை, தீபமஹாகாளி பூஜைகள் நடந்த பின், மகா தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !