கேணீஸ்வரர் கோவிலில் சிறப்பு குரு பூஜை
                              ADDED :3366 days ago 
                            
                          
                           விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கேணீஸ்வரர் கோவிலில் சிறப்பு குரு பூஜை நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் கரும்பு வயலில் உள்ள கேணீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு (ஆக.,12) வெள்ளிக்கிழமை முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்திருந்தார். முன்னதாக சிவனடியார்கள் மாலதி, பாலசுப்ரமணியன் ஆகியோர் திருவாசகம் முற்றோதினர். தொரவி ஊராட்சி மன்ற தலைவி நாகேஸ்வரி சங்கர், வழக்கறிஞர் சம்பத், பாலையா உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.