உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவில் விழா: பால் குடம் எடுத்த திருநங்கையர்

சக்தி மாரியம்மன் கோவில் விழா: பால் குடம் எடுத்த திருநங்கையர்

கிருஷ்ணராயபுரம்: மணவாசி சக்தி மாரியம்மன் கோவிலில், ஆடி மாத பூஜை முன்னிட்டு திருநங்கையர் சார்பில், மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம் எடுத்துச் சென்றனர்.

கரூர் மாவட்டம், கிருஷணராயபுரம் அடுத்த மணவாசி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், 30க்கும் மேற்பட்ட திருநங்கையர் வசித்து வருகின்றனர். இவர்கள், இப்பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலுக்கு, (ஆக.,12), ஆடி வெள்ளியை முன்னிட்டு, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி விடுதல் நிகழ்ச்சிகளும், 14ம் தேதி காலை அம்மனுக்கு கூழ் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருநங்கையர் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !