வரதராஜ பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் நிறைவு!
ADDED :3385 days ago
திருவொற்றியூர்: காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆடி மாதத்தில் நான்கு நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன் படி, கடந்த வெள்ளியன்று, அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு பவித்ர உற்சவம் துவங்கியது. தினமும், காலை, மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பவள வண்ண பெருமாளுக்கு, விஷேச திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடந்தது. சனிக் கிழமை சக்கரத்தாழ்வாருக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. உற்சவத்தின் கடைசி நாளான நேற்று, விஷேச ஹோமங்கள் நடத்தப்பட்டன. பட்டு வஸ்திரம் ஹோமத்தில் செலுத்தப்பட்டு, பூர்ணாஹூதி நிறைவு பெற்றது. நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.