உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி

சிதம்பரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் கிழக்கு கோபுரத்தில், தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், 70வது சுதந்திர தினத்தையொட்டி, சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தது. இதனை தொடர்ந்து, நடராஜர் சன்னிதி சித்சபையில், வெள்ளித் தட்டில் தேசியக் கொடியை வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், மேள தாளம் முழங்க, கிழக்கு கோபுரத்திற்குச் சென்று, கோபுரத்தின் உச்சியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !