விழுப்புரத்தில் ஆதிபராசக்தி இயக்கம் கஞ்சிக்கலய ஊர்வலம்
ADDED :3384 days ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் கஞ்சிக்கலயம், பால்குட ஊர்வலம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள், கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். மாவட்டத் தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் பாஸ்கரன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கஞ்சி வார்த்தல், பாலபிஷேகம் நடந்தது. பின்னர், நடந்த பால்குட ஊர்வலத்தை, அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார். அ.திமு.க., மாவட்ட மருத்துவர் அணி தலைவர் கலைச்செல்வம், துணைத் தலைவர் பத்மநாபன், செயலர் பரத்குமார், பொருளாளர் ரத்தின சிகாமணி பங்கேற்றனர்.