உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தங்கரர் சிற்பம் காஞ்சி அருகே கண்டுபிடிப்பு

தீர்த்தங்கரர் சிற்பம் காஞ்சி அருகே கண்டுபிடிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள ராவுத்தநல்லுார் கிராமத்தில், தொல்லியர் ஆய்வாளர் கோ.உத்திராடம் ஆய்வு மேற்கொண்டு, சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மூன்றடி உயரமுள்ள இந்த தீர்த்தங்கரர் சிற்பம், செவ்வக வடிவில், சிம்மாசனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில், பத்மாசனத்தில், தனது இரு கைகளையும், ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, தியான நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. எனினும், முகம் சிதைந்துள்ளதால், கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தெளிவாக பார்க்க முடியவில்லை. இச்சிற்பத்தின் இருபுறமும், நின்ற கோலத்தில் சாமரம் வீசும் யட்சர்கள் காணப்படுகின்றனர். இந்த சிற்பம், 12 - 13ம் நுாற்றாண்டை சேர்ந்த, பிற்காலச் சோழரின் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம், என, கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !