பண்ருட்டியில் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம்
பண்ருட்டி: பண்ருட்டியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சக்தி பீடம் சார்பில் பெண்கள் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். கடந்த 13ம் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்றுதல் நடந்தது. 14ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிக்கு சோமநாத சுவாமி கோவிலில் இருந்து கஞ்சிக் கலயம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை டி.எஸ்.பி., முரளிதரன் துவக்கி வைத்தார். காலை 11:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், 11:45 மணிக்கு அன்னதானம் நடந்தது. 12:30 மணிக்கு பிரசார மாவட்ட இணைச் செயலர் சுப்ரமணியன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். கடலுார்: வண்டிப்பாளையம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மழை வேண்டி 35ம் ஆண்டு ஆடி மாத கஞ்சி கலயம், முளைப்பாரி ஏந்திய ஊர்வலம் நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெருவில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதி வழியாக ஆதிபராசக்தி மன்றத்தை வந்தடைந்தது.