அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3384 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 8ம் ஆண்டு திரு விளக்கு பூஜை நடந்தது. ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி கடந்த 12ம் தேதி, மாலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பின்னர் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.