மாகாளியம்மன் திருவிழா: இன்று சுவாமி திருவீதியுலா
ADDED :21 hours ago
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த 13ம் தேதி, பந்தல்கால் அமைக்கும் நிகழ்வுடன் துவங்கியது. 17ம் தேதி நோன்பு சாட்டுதல் நடந்தது.
20ம் தேதி, பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். 23ம் தேதி, அம்மன் சக்தி அழைக்கும் நிகழ்வு நடந்தது.
25ம் தேதி, அதிகாலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை மற்றும் பூவோடு எடுத்து வரப்பட்டது.
இன்று, 26ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 27ம் தேதி இரவு அம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.