உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் இலுப்பதோப்பு கோவிலில் ஆடித்திருவிழா

திண்டிவனம் இலுப்பதோப்பு கோவிலில் ஆடித்திருவிழா

திண்டிவனம்: திண்டிவனம் இலுப்பதோப்பு ராஜராஜேஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.  திண்டிவனம் இலுப்பதோப்பு ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் 40வது ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 7 ம்  தேதி துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனையும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலையில் மகா  தீபாராதனை மற்றும் இரவு 7.00மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா  நடந்தது. மறுநாள் (8ம் தேதி) அம்மனுக்கு மகா அபிஷேகமும், மாலையில் மஞ்சள் காப்பு அலங்காரம் நடந்தது.  நிகழ்ச்சியில், கவுன்சிலர் வேல்முருகன், அரிமா சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கரன், கோவில் நிர்வாகி ராதாகிருஷ்ணன், காங்., பிரமுகர் தயாளன், ராஜேந்திரன், அரிமா சங்க தலைவர் நவநீதகண்ணன், செயலாளர் ராகவேந்திரா ராமமூர்த்தி, பொருளாளர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !