உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம்

பழநி மாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம்

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப். 6 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. பிப்.,10 ல் மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டுதல் ,


பிப்.,17ல் கொடியேற்றம் நடந்தது. பத்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிப்.24ல் அம்மனுக்கு மாலையில் கோயில் முன் மாரியம்மன் உற்ஸவர் எழுந்தருள அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று மாலை 4:31 மணிக்கு தேரோட்டம் நடந்தது . கோயில் யானை கஸ்துாரி தேரின் பின்னால் வரபக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் தேரை ரத வீதியில் இழுத்து வந்தனர்.கிழக்கு ரத வீதியில் மாரியம்மன் கோயிலுக்கு எதிரே ஆக்கிரமிப்பு இளநீர் கடை இடையூறால் தேர் சக்கரம் நகர முடியாமல் நின்றது. தெற்கு ரத வீதியில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அங்கும் தேர் நகர்வதில் சிரமம் ஏற்பட்டது. மாலை 6:15 மணிக்கு நிலைக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !