பழநியில் பூச்சொரிதல் ரத ஊர்வலம்
பழநி: பழநி மாரியம்மன் மாசி திருவிழா திருக்கல்யாணத்தை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
இக்கோயில் திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு பழநி அடிவாரம், வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் ஊர்வலம் நடந்தது.
இதை கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார் துவங்கி வைத்தார்.ரதம் பூக்களால் வடிவமைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பாத விநாயகர் கோயிலில் துவங்கிய ஊர்வலம் சன்னதி வீதி, காந்தி மார்க்கெட் ரோடு, பெரிய கடைவீதி வழியாக வந்தது.
தமிழ்நாடு பிராமண ஸமாஜ தலைவர் ஹரிஹரமுத்தய்யர், டி.எஸ்.பி., தனஜெயன் முன்னிலை வகித்தனர்.நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் பழனிச்சாமி, சபாநாயகர் செல்வம், வி.ஹெச்.பி அமைப்பாளர் செந்தில் குமார், பா.ஜ., நகரத் தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் ஆனந்த், தி.மு.க நகர செயலாளர் வேலுமணி, கவுன்சிலர் சுரேஷ், அ.தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.