செய்யூர் கந்தசுவாமி கோவிலில் மாசி மாத கிருத்திகை விமரிசை
ADDED :1 days ago
செய்யூர்: செய்யூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விமரிசையாக நடந்தது.
செய்யூர் பஜார் பகுதியில், பழமைவாய்ந்த ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோவில் உள்ளது.
இங்கு ஆடி கிருத்திகை, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், மாசி கிருத்திகை விழா, பங்குனி உத்திர திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப் படுகின்றன.
இந்த ஆண்டு மாசி மாத கிருத்திகை விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கந்தசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.