உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கோவிலில் நாளை மாசி தேரோட்டம்

திருப்போரூர் கோவிலில் நாளை மாசி தேரோட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் நாளை நடக்கிறது.


திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் மாசி பிரம்மோத்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி காலை, மாலை வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.


நேற்று காலை மங்களகிரி உத்சவமும், இரவு தங்கமயில் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது.


இன்று பகல் தொட்டி உத்சவமும், இரவு யானை வாகன வீதியுலாவும் நடைபெற உள்ளது.


முக்கிய விழாவாக, ஏழாம் நாள் உத்சவமான தேர் திருவிழா, நாளை நடக்கிறது.


காலை 9:00 மணியளவில், தேரடியில் துவங்கி, நான்கு மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !