உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் நாகம்மாளுக்கு பாலாபிஷேகம்

மேலுார் நாகம்மாளுக்கு பாலாபிஷேகம்

மேலுார்: மேலுார் செக்கடி நாகம்மாள் கோயில் ஆடி மாத திருவிழாவில் நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மண் கட்டி தெப்பக்குளத்தில் ஊர்வலமாக புறப்பட்டு, செக்கடி வழியாக கோயிலை அடைந்தது. மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் 30 அடி நீளமுள்ள ஒரே அலகில் 3 பேர் அலகு குத்தி வந்தனர். டி.எஸ்.பி., (பொறுப்பு) தங்கவேல், இன்ஸ்பெக்டர்கள் ராமநாராயணன், விஜயகுமார், எஸ்.ஐ., சிவசக்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !