உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் யாத்திரை: பெண்கள் அபிஷேகம் செய்து வழிபாடு!

அம்மன் யாத்திரை: பெண்கள் அபிஷேகம் செய்து வழிபாடு!

திருப்பூர்: திருப்பூரில், தர்ம ரக்ஷன சமிதி சார்பில், அம்மன் யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மக்களிடையே, ஆன்மீக விழிப்புணர்வு  ஏற்படுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வு மறைந்து, ஒற்றுமை  உணர்வு ஏற்படுத்தவும், உடல் நலன் காக்க அங்காளபரமேஸ்வரி அருள்  கிடைக்கவும், தர்ம ரக்ஷன சமிதி சார்பில், அம்மன் யாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று, வேதாகம விதிமுறைப்படி  அம்மன்   பிரதிஷ்டை செய்து, சண்டிஹோமம் நடத்தப்பட்டது. உற்சவர் சிலை, பத்மாவதிபுரம் மாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.  ஏராளமான பெண்கள், மஞ்சள், பன்னீர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அனைவருக்கும் பிரசாதம்  வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !