ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு!
ADDED :3384 days ago
சபரிமலை: ஆவணி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரு கிறது. அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, 21ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடைபெறும். தினமும், சிறப்பு பூஜைகளான படிபூஜை, உதயாஸ்தமான பூஜை ஆகியவை நடத்தப்படும். 21ம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோவில் நடை செப்டம்பர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.