யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3384 days ago
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, நேற்று காலை யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, ரெட்டிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. பின்னர், ராம பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் நடந்தன. மாலை, 6 மணியளவில் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.