உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் முத்துமாரியம்மன் கோயிலில் பாரி விழா

திருப்புத்துார் முத்துமாரியம்மன் கோயிலில் பாரி விழா

திருப்புத்துார்,: திருப்புத்துார் நடுத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் பாரி திருவிழா நடந்தது.ஆக.9ல் முத்துமாரி அம்மனுக்குகாப்புக் கட்டி பாரி விழா துவங்கியது. கோயில் வளாகத்தினுள் மழை வேண்டி பெண்கள் பாரி வளர்த்தனர். தினசரி அம்மனுக்கு பூஜை நடந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு பாரி திருவிழா நிறைவடைந்தது. நேற்று காலை பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக சீதளிகுளத்திற்கு எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !