உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி பீடத்தில் 11 அடி உயர கல்யாண சீனிவாசர் சிலை பிரதிஷ்டை

தன்வந்திரி பீடத்தில் 11 அடி உயர கல்யாண சீனிவாசர் சிலை பிரதிஷ்டை

வேலூர்: தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 11 அடி உயர கல்யாண சீனிவாசர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 11 அடி உயரத்தில், வேப்பமரத்தால் செய்யப்பட்ட கல்யாண சீனிவாசர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடந்தது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜானகிராமன் பட்டர் தலைமையில், முரளிதர சுவாமிகள் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதையொட்டி, பத்து லட்சம் ஜப ஹோமம், யாகசாலை பூஜை, குரு பூஜை, கணபதி பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !