உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பரையூர், வனகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

கும்பரையூர், வனகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திண்டுக்கல்: கொடைக்கானல் வட்டம், கும்பரையூர் (எ) கும்பமாநகரில் அமைந்துள்ள வனதேவதை, வனகாளியம்மன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 21.8.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்:
நாள்: 20.8.2016 (சனிக்கிழமை)
காலை: 9.30 மணிக்கு மேல்  10.30 மணிக்குள்- விக்னேஸ்வரர் பூஜை புண்ணியாஹவஜனம், அனுக்கைஞ, மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல்.

மாலை: 6.00 மணிக்கு- புண்ணியாஹவஜனம், விக்னேஸ்வரர் பூஜை, அனுக்ஞை, மஹா சங்கல்பம், வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்துபலி, தீபாராதனை, முதற்கால யாகசாலை பூஜை ஆரம்பம், கலாகர்ஷணம், ரக்ஷாபந்தனம், த்வாரதோர பூஜைகள், கலசத்தில் சாமியை ஆவாஹனம், முதற்கால யாகவேள்வி ஆரம்பம், கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், ஸ்ரீஷீத்தா ஹோமம், நவகிரக ஹோமம், த்ராவியாஹூதி.

இரவு: 9.00 மணிக்கு- முதற்கால பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
இரவு: 9.30 மணிக்கு- வன காளியம்மனுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், கோபுர கலசம், பிரதிஷ்டை.

21.8.2016 (ஞாயிற்றுக்கிழமை)
காலை: 6.30 மணிக்கு- புண்ணியாஹவஜனம், விக்னேஸ்வரர் பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், அம்மனை கலசத்தில் ஆவாஹணம் செய்தல், த்வாரா தோரண பூஜைகள் ஆரம்பம், இரண்டாம் கால யாகவேள்வி ஆரம்பம் துர்காஷீத்த ஹோமம், புருஷஹீத்தஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம், நவக்கிரக ஹோமம், நாடி சந்தானம் (அம்மனுக்கு சக்தி கொடுத்தல்) த்ராவியாஹூதி.

காலை: 9.15 மணிக்கு- இரண்டாம் கால மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, வேத விண்ணப்பம்.
காலை: 9.30 மணிக்கு- யாத்ராதானம், கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு.
காலை: 9.45 மணிக்கு- வனதேவதை வனகாளியம்மன் விமானகோபுர கலசங்கள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், அதன்பின்பு மூலஸ்தான அம்மனுக்கு மஹாகும்பாபிஷேகம், அதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை வேதபாராயணம், பிரசாதம் வழங்குதல்.
காலை: 10.00 மணிமுதல்- மாபெரும் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.

தொடர்புக்கு: 80126 29102.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !