சித்தானந்தா கோவிலில் பூணூல் மாற்றும் வைபவம்
புதுச்சேரி: யஜூர் வேத ஆவணி அவிட்டத்தையொட்டி, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் நேற்று நடந்த வைபவத்தில், பிராமண சமூகத்தை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டோர், பூணூல் மாற்றிக்கொண்டனர். கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், யஜூர் வேத, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிராமண சமூகத்தினருக்கு பூணூல் மாற்றும் வைபவம் நேற்று நடந்தது. காலை 5:00 மணி முதல் பகல் 12 வரையில், ஒரு மணி ÷ நரத்திற்கு ஒரு முறை குழுக்களாக பூணூல் அணிய, புதுச்சேரி பிராமணர் சங்கம் மற்றும் சாய் சங்கர பக்த சபா சார்பில் ஏற்பாடு செய்திருந்தது. ராஜா சாஸ்திரிகள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த வைபவத்தில், 1,200க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள், பூணூல் மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து, இன்று (19ம் தேதி) காலை 6:00 மணி முதல் 8:00 வரை, உலக நன்மை வேண்டி சமஷ்டி காயத்ரி ஜபம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பிராமண சமூக நலச்சங்க தலைவர் கல்யாணம், சர்மா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.