திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி ஆவிட்டம்: 3 மணி நேரம் தரிசனம் ரத்து
ADDED :3382 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆவணி அவிட்டத்தையொட்டி, மூன்று மணி நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, தரிசனம் ரத்து செய்யப்பட்டது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில், காலை 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று மூலவர் முருகப் பெருமானை தரிசிக்கலாம். இந்நிலையில், நேற்று, ஆவணி அவிட்டத்தையொட்டி, மதியம், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, கோவில் நடை சாத்தப்பட்டது. இந்த நேரத்தில் மலைக்கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் விழா நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமம் நடத்தப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு பிறகு வழக்கம் போல், திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.