கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பூணூல் அணிதல்
ADDED :3382 days ago
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் பூணூல் அணிந்து கொண்டனர். ஆவணி மாத பவுர்ணமி அவிட்டத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பூணூல் அணியும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 5 கலசங்கள் வைத்து பூஜை நடந்தது. பிரதோஷ நாயகர், சிவகரதீர்த்த குளத்திற்கு எழுந்தருளியதைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் பூணூல் அணிந்து கொண்டனர். மங்கலம்பேட்டை: சிவன் கோவிலில் காலை 10:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் விஸ்வகர்மா சமூகத்தினர் பழைய பூணூலை அகற்றி, புதிய பூணூல் அணிந்து கொண்டனர்.