குன்னூர் குருசடியில் ஆண்டு விழா
ADDED :3382 days ago
குன்னூர்: அருவங்காடு காந்திநகர் அமலோற்பவ அன்னை குருசடியின், 13வது ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, அமலோற்பவ அன்னை அன்பிய குடும்பங்களால் ஜெபமாலை, நவநாள், இறை இரக்க ஜெப வழிபாடு நடத்தப்பட்டது. விழா நாளன்று காலை, 11:00 மணிக்கு, தூய ஆவியானவர் தேவாலய பங்குத் தந்தை ஜான் தலைமையில், ஆடம்பர திருப்பலி நடத்தப்பட்டது. மாலை, அருவங்காடு மெயின்கேட் பகுதியில் துவங்கி, காந்திநகர் ஊரில் அன்னை பவனி சென்றார். பின், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை குரு சடி கமிட்டி அமைப்பாளர் ஜார்ஜ் தலைமையில், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.