திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் விமான கலச ஸ்தாபனம்
ADDED :3380 days ago
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் யோக நரசிம்ம சுவாமி சன்னிதி மகா சம்ரோக் ஷணத்தை முன்னிட்டு, விமான கலச ஸ்தாபனம் நேற்று நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உள்ள யோக நரசிம்மர் சன்னிதி உள்ளிட்ட பல திருப்பணிகள், 95 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டன. இதைஅடுத்து, ஆக., 22ம் தேதி மகா சம்ரோக் ஷணம் நடக்கவுள்ளது. இதையடுத்து, கடந்த 18ம் தேதி யாகசாலை பிரவேசம், அங்குரார்ப்பணம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகிய நடந்தது. நேற்று காலை விஸ்வரூப தரிசனம், காலசந்தி நடந்தது. பின், விமான கலசங்கள் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.