உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மன் கோவிலில் செடல் திருவிழா

நாகம்மன் கோவிலில் செடல் திருவிழா

கடலுார்: கடலுார், நாகம்மன் கோவிலில் நேற்று நடந்த செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடனை செலு த்தினர். கடலுார், பஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நாகம்மன் கோவிலில் செடல் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி யது. தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவு அம்மன் வீதியுலா நடந்து வந்தது. முக்கிய விழாவான செடல் திருவிழா ÷ நற்று நடந்தது. அதனையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்கள்  செடல் போட்டு கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !