உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாழாகுது தேரு: பாதுகாப்பது யாரு?

பாழாகுது தேரு: பாதுகாப்பது யாரு?

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரை, நிலை நிறுத்துவதற்கு, ‘ஷெட்’ அமைக்காத காரணத்தால், வெயிலிலும், மழையிலும் தேர்  வீணாகி வருகிறது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த ÷ காவிலுக்கென தனியாக தேர் இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. கடந்த ஆண்டில், ௪௬ லட்சம் ரூபாய் செலவில், ௪௧ அடி உயரத்தில் இலு ப்பை மரத்தினால் ஆன பிரம்மாண்ட தேர் செய்யப் பட்டது. ௭௪ ஆண்டுகள் கழித்து, கடந்த மாசி பிரம்மோற்சவத்தின் போது, புதிய தேர் மாட  வீதிகளை சுற்றி வந்தது. திருவிழா முடிந்தபின்,  தேரைப் பாதுகாக்க, ‘ஷெட்’ அமைக்க வேண்டுமென்று,  பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி,  கோவில் குளம்  அருகே இடம் ஒதுக்கப்பட்டது.  இன்னும், ‘ஷெட்’ அமைக்கப் படவில்லை. இதனால்,  வெயிலிலும், மழையிலும் தேர் சேதமடைந்து  வந்தது. பக்தர்களின் நெருக்கடியை அடுத்து, மழையில் தேர் நனையாதவாறு பிரம்மாண்ட தார்பாய் போட்டு மூடப்பட்டது. பெரிய தேர் என்பதால்,  இதை மூடுவதற்கு குறைந்தது 6 ராட்சத தார்பாய்கள் வேண்டும். அப்படி மூடப்படும் தார்பாய்களும் நாளைடைவில் கிழிந்து, தொங்குகின்றன.   இதனால், பல லட்சம்  செலவழித்து செய்யபட்ட தேரில் தூசி அடைந்து பாழாகி வருகிறது. பல ஆயிரங்கள் செலவழித்து, தார்பாய் போட்டு தேரை  மூடுவதற்கு பதிலாக, தேருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், சில லட்சத்தை ஒரு முறை செலவழித்து, ‘ஷெட்’ அமைப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !