பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3380 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் புனரமைக்கப்பட்ட பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. கூடலுார் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்கள் கோவிலைச் சுற்றி வலம் வந்தன. சிவானந்தா தவக்குடிலின் ராஜூ அடிகளார், வாராஹி மணிகண்ட சுவாமிகள், திருநீலக்கண்ட தவக்குடிலின் வையாபுரி சுவாமிகள் கோபுர கலசங்களுக்கு தீர்த்தங்கள் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இதைதொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார வழிபாடு, பேரொளிக்காட்சி வழிபாடு நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.