உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை: உடுமலை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை தென்னை மரத்து வீதியில் விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பவுர்ணமியையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், ஆராதனைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதே போல் உடுமலை மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !