உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு மின் விளக்குகள் அமைப்பதில் சிக்கல்!

காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு மின் விளக்குகள் அமைப்பதில் சிக்கல்!

மாமல்லபுரம்: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு,  மின் விளக்குகள்  அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.  இதுகுறித்து, வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது:  காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமான  பணி, கி.பி.,700ல், ராஜசிம்மனால்  துவக்கப்பட்டு, மூன்றாம் மகேந்திரவர்மனால் முடிக்கப்பட்டது. பின், விஜயநகர பேரரசு காலத்தில், சில பகுதிகள்  சேர்க்கப்பட்டு அழகு படுத்தப்பட்டன.  இது, காஞ்சிபுரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பதோடு, ஆன்மிகவாதிகளையும் ஈர்த்து  வருகிறது. அங்கு, தமிழக சுற்றுலா துறை சார்பில், இரவில் ஒளிரும், ‘போகஸ்’ விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தொல் லியல் துறை அதற்கு அனுமதி தர மறுத்துள்ளது. இது, வரலாற்று ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு  அவர்கள் கூறினர்.

இந்திய தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:  உலக சுற்றுலா பயணிகள் விரும்பி வரும் இடங்களில் முக்கியமானது மாமல்லபுரம். அ ங்கு, பல்லவர்களால், 7ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கடற்கரை கோவில் உள்ளது. அங்குள்ள ரதங்கள், மண்டபங்கள் உள்ளிட்டவை  மிகவும் புகழ்பெற்றவை. இது, கடந்த, 1984ம் ஆண்டு, யுனெஸ்கோவால், உலக  பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  இதை  பாதுகாக்கும் பணியை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. அங்கு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான அனைத்து செய ல்பாடுகளையும், தமிழக சுற்றுலா துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சில மாதங்களுக்கு முன், மாமல்லபுர புராதனச் சின்னங்கள் இரவிலும்  ஜொலிக்கும் வகையில், அதிக திறன்வாய்ந்த, ‘போகஸ்’ விளக்குகளை, தமிழக சுற்றுலா துறை பொருத்தியது. ஆனால், அதற்கான மின் கட்டணத்தை  செலுத்த தவறிவிட்டது.  மின் வாரியம், மின் வினியோகத்தை நிறுத்தியது. அதனால், மாமல்லபுர சின்னங்கள் மீண்டும் இருளில் மூழ்கியுள்ளன.  சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் எங்களிடம் புகார் தெரிவிக்கின்றனர்.  தற்போது, தமிழக சுற்றுலா துறை, காஞ்சிபுரம் கைலாசநாதர் ÷ காவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும், சக்தி வாய்ந்த மின்  விளக்குகளை பொருத்த, எங்களிடம் அனுமதி கோரிஉள்ளது.  தமிழக சுற்றுலா துறை அமைக்கும் மின் விளக்குகள் தொடர்ந்து ஒளிரும் என்று உறுதி  அளித்தால், இந்திய  தொல்லியல் துறை அனுமதி அளிக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !