இரும்பை கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :3380 days ago
புதுச்சேரி: இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி, நாளை (21ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி அண்ணாமலையார் கிரிவலக் குழு மற்றும் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில், நாளை 21ம் தேதி, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. காலை 7:00 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியை, திருக்கழுகுன்றம் தாமோதரன் தலைமை தாங்கி நடத்துகிறார். முற்றோதல் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு, சிவனின் அருளை பெறமாறு, அண்ணாமலையார் கிரிவலக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.