உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை பெருமாள் கோவில் தேர்த்திருவிழா: செப்., 30ல் துவக்கம்

கோட்டை பெருமாள் கோவில் தேர்த்திருவிழா: செப்., 30ல் துவக்கம்

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, வரும், 30ம் தேதி துவங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு, கிராம சாந்தி, நகர சோதனை நடக்கிறது. அக்டோபர் 1ல் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, தீபாராதனை, மாலை 6க்கு அன்னபட்சி வாகனத்தில் ஸ்வாமி உலா நடக்கிறது. அக்டோபர் 2ல் காலை 6க்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், மாலை 6க்கு சிம்ம வாகனத்தில் உலா நடக்கிறது. அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் காலை யாஹ சாலை பூஜை, திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு வாகன உலா நிகழ்ச்சி நடக்கிறது. அக்டோபர் 7ம் தேதி காலை 7.15க்கு திருத்தேருக்கு ஸ்வாமி எழுந்தருளல், 9.15க்கு தேர் வடம்பிடித்தல், மாலை 6 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. அக்டோபர் 10ம் தேதி மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. ""பக்தர்கள், தனிப்பட்ட நபர்களிடமோ, குழுக்களிடமோ நன்கொடையை தராமல், கோவில் நிர்வாக அலுவலகத்தை நேரில் அணுகி, நன்கொடையை வழங்க வேண்டும், என, கோவில் செயல் அலுவலர் ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !