வெங்கட்ரமண கோவிலில் லட்சார்ச்சனை
ப.வேலூர்: ப.வேலூர் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், லட்சார்ச்சனை பெருவிழா வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. முன்னதாக, வரும், 27ம் தேதி திருக்கோடி ஏற்றுதல், லட்சார்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 28ம் தேதி, 29ம் தேதி சேனை முதல்வர் வழிபாடு, அனுக்ஞை, பகவத் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 30ம் தேதி, பெருமாள் உபய நாச்சியாருடன் திருவீதி உலா, பவித்ர வேள்வி பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேற்படி நிகழ்வுகளை நாமக்கல் வெங்கட சேஷாத்ரி பட்டாச்சாரியார் நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை கோவிலின் தக்கார் சுதாகர், செயல் அலுவலர் சாந்தி மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.
* ப.வேலூர் பஞ்சமுக ஹேரம்ப மஹாகணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.