காசிவிஸ்வநாத கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :3379 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், காசி விஸ்வநாத கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை, 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, காலை, 8.30 மணிக்கு, மேல் கடம் புறப்பாடு, விமான மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10.30 மணிக்கு மஹா அபிஷேகம், 11.30க்கு, மஹா தீபாராதனை நடந்தது. இதில், பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* நங்கவள்ளி அடுத்த, மேற்கு தேவஸ்தான வனவாசி, வரசக்தி மாரியம்மன் மற்றும் சூரப்பள்ளி பஞ்சாயத்து, புதூர் சவுபாக்கிய கணபதி ஆலயங்களின், கும்பாபிஷேக விழா, நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.