பொன்னேரி சர்வசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3379 days ago
பொன்னேரி : சர்வசக்தி விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. பொன்னேரி திருவாயற்பாடி, அரிகிருஷ்ண பெருமாள் கோவிலின் பின்புறமுள்ள சந்தான புஷ்கரணி திருக்குளத்தின் அருகில், சர்வசக்தி விநாயகர் கோவில் அமைந்து உள்ளது. குளத்தின் படித்துறை பகுதியில் சிறிய குடிலில் அமைந்திருந்த இந்த விநாயகருக்கு, புதிதாக கோவில் நிறுவப்பட்டது. நேற்று காலை, 7:30 மணிக்கு விநாயகர் சன்னிதி கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் உள்ளிட்ட பரிகார மூர்த்திகளின் சன்னிதிகளுக்கும், கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டு சென்றனர்.